திரிவேணி சங்கமத்தில் நீராடி துறவிகளிடம் ஆசி பெற ஆவல்: அமித் ஷா
நாளுக்கு 7 மணிநேரம் உழைக்கும் இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்!
இந்திய ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 42 மணிநேரம் வேலை செய்வதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் வேலை செய்வதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை கூறுகிறது. ஊழியர்கள், நாளுக்கு சராசரியாக 422 நிமிடங்கள்வரையில் (7 மணிநேரம்) வேலை செய்கின்றனர்.
வியட்நாம், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ் முதலான வளர்ந்து வரும் நாடுகளிலும் ஊழியர்கள் வாரத்துக்கு அதிகபட்சம் 48 மணிநேரமே வேலை செய்கின்றனர். இருப்பினும், இவற்றில் சில நாடுகளில் வேலை நாள்கள் 5-ஆகக் குறைக்கப்பட்டு, வேலை நேரம் 8 மணிநேரம்வரையில் இருக்கும்.
இதையும் படிக்க:கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல! டென்மார்க் - அமெரிக்கா தலைவர்களிடையே காரசார விவாதம்!
இதனிடையே, நாடு முன்னேற வாரத்துக்கு 70 மணிநேரம்வரையில் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவன இணை நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியதும், அமெரிக்காவைப்போல பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், சீனாவைப்போல வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் கூறியதும் இந்திய நிறுவனங்களின் பணியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.