செய்திகள் :

`பிரபாகரனும் பெரியாரும் எதிரெதிர் துருவங்களா?' - சீமான் முன்னிறுத்துவதன் பின்னணி என்ன?

post image

பெரியார் குறித்து காட்டமான விமர்சனங்களை உதிர்த்துவந்த சீமான், இப்போது `பெரியார் Vs பிரபாகரன்’ என்ற கோணத்தில் விவாதத்தை கிளப்பி சர்ச்சை தீயை பற்றவைத்திருக்கிறார். பிரபாகரன் பெரியாரை எதிர்த்தற்கான சான்றுகள் இல்லை என பேசப்படும் சூழலில், அதை எப்படி நிரூபிக்கப்போகிறார் என்பதே அவர் முன்பிருக்கும் கேள்வி. இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.

சீமான், விஜய்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.களஞ்சியம் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் ``பெரியார் மீதான முரண்களை உடைத்துப் பேசாமலும், இழிவுபடுத்தாமலும் கடந்துதான் சென்றோம். ஆனால் தமிழைப் பழித்துப் பேசி, தமிழ்ச் சமூகத்துக்கு எந்த வகையிலும் வழிகாட்டியாக இல்லாத அவரை, கொள்கைத் தலைவராக அறிவிக்கிறார் புதிய கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய். பெரியாரை வழிகாட்டியாக முன்னிறுத்தி எதிர்காலத் தலைமுறையைத் தவறாக விஜய் வழிநடத்துவதை, எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகையால்தான் வேரோடு சாய்க்க முடிவெடுத்திருக்கிறோம்” என்றிருந்தார்.

இதுகுறித்து பேசும் விவரமறிந்தவர்கள் ``தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பெரியாரை கொள்கை தலைவராக அறிவித்தார் விஜய்.

முதல்தலைமுறை வாக்குகளை நம்பி நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கு விஜய்யின் வருகை சிம்மசொப்பனமாக அமைந்திருப்பதாலதான் விஜய்க்கு கொள்கை தெளிவோ சிந்தாந்த புரிதலோ இல்லை என்பதை அழுத்தமாக பதிய வைக்கிறது நாம் தமிழர். பெரியாரை கையிலெடுத்தது புரிதலற்ற அரசியல்தான் என்பதை நிறுவன முயல்கிறார் சீமான். அதற்கு முன்பாக பெரியாரை தமிழுர்களின் விரோதி என பதியவைத்தால் விஜய்க்கு செல்லும் வாக்குகளை அதைவைத்தே மறைமாற்றிவிடலாம் என்பதே நா.த.க-வின் அரசியல் கணக்காக இருக்கலாம்” என்றனர்

சீமான் - கேப்டன் பிரபாகரன்

பெரியார்மீது அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சியை நோக்கி கிடுக்குப்பிடி கேள்விகளை ஏவியதோடு சீமான் பேச்சுக்கு ஆதாரம் கேட்டு கடுமையாக நெருக்கடியை கொடுத்து வருகிறது ஆளும்தரப்பு உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள். மறுபக்கம், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் சீமானின் நீலாங்கரை இல்லத்தை முற்றுகையிட்டனர். “பெரியார் குறித்து நான் பேசியதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் காட்டிக் கொள்கிறேன். அண்ணா பல்கலைக்கழக மாணவி கொடூரம் உள்பட வேறு எந்த மக்கள் போராட்டங்களுக்கும் வராத பெரியாரிஸ்டுகள் என் வீட்டை முற்றுகையிட வந்திருக்கிறார்கள். பெரியார்மீது அடி விழுந்தவுடன், பிரபாகரனை நான் சந்தித்து படம் எடுத்ததை பொய் என்கிறார்கள். பெரியாரா... பிரபாகரனா... என மோதி பார்த்துவிடுவோம்!” என இப்போது வெகுண்டெழுந்திருக்கிறார் சீமான்.

இவ்விவகாரத்தில் ரியாக்ட் செய்த வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, ``விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சித்தாந்த வலிமை கொண்ட இயக்கமாகவே உருவாக்கினார் மேதகு பிரபாகரன்.

விடுதலை புலிகள் இயக்கத்தில் சேர விரும்புவோருக்கு முதலில் மார்க்சியம் குறித்தும் பெரியாரியம் குறித்தும் வகுப்பு எடுப்பார்கள். அப்படிப்பட்ட தொலைநோக்கு உள்ள தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரைத் தந்தை பெரியாருக்கு எதிராக நிறுத்துவது பிழைப்புவாதம் மட்டுமல்ல. தேசிய இன விடுதலைக்கு செய்யக்கூடிய துரோகமாகும்!” என்றிருக்கிறார்.

வன்னி அரசின் கருத்தை அமோதிக்கும் பெரியாரிஸ்டுகள் சிலர் ``பெரியார் சொன்னதாக ஆதாரம் இல்லாத அவதூறு பரப்பிய சீமான் பிரபாகரன் பெரியாரை எதிர்த்தற்கான சான்றுகளை வெளியிட வேண்டும்” எனக் கோருகின்றனர்.

சீமான் தனது கருத்துகளை நிரூபிக்கப் போகிறாரா.. திரும்பபெறப் போகிறாரா.. பார்ப்போம்! .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Republic Day 2025 : தேசிய கொடியேற்றிய மதுரை ஆட்சியர்; குடியரசு தின கொண்டாட்டம்... | Photo Album

குடியரசுதின கொண்டாட்டம் மதுரைகுடியரசுதின கொண்டாட்டம் மதுரைகுடியரசுதின கொண்டாட்டம் மதுரைகுடியரசுதின கொண்டாட்டம் மதுரைகுடியரசுதின கொண்டாட்டம் மதுரைகுடியரசுதின கொண்டாட்டம் மதுரைகுடியரசுதின கொண்டாட்டம் மத... மேலும் பார்க்க

Padma Awards: தமிழ் பறையிசைக் கலைஞர், அஷ்வின், AK உட்பட 139 பேருக்கு விருது - மத்திய அரசு அறிவிப்பு

கல்வி, இலக்கியம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், சாதனையாளர்கள், சேவை செய்பவர்ககளுக்கு ஆண்டுதோறும் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுக... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: `பெரியார் பெயரைத் தவிர்த்த சீமான்; சைலன்ட் திமுக’- முதல் நாள் பிரசாரமும் கள நிலவரமும்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் திமுக, நாம் தமிழர் கட்சி என இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது. கடந்த சில நாள்களாக பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் கரு... மேலும் பார்க்க

`60,000 காலிப்பணியிடங்கள் இருக்க 8,000 இடங்களை மட்டும் நிரப்புவதா?' - சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

தமிழ்நாடு சத்துணவு மையங்களில் 3,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கி, 8,000 பேரை பணியமர்த்துவது குறித்து, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையால் அதிருப்தியடைந்த சத்துணவு ஊழியர்கள், தங்கள... மேலும் பார்க்க

Tungsten: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து; 'ஸ்டாலின் டு அண்ணாமலை' அரசியல் தலைவர்கள் கருத்து

மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு விடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்ட... மேலும் பார்க்க