செய்திகள் :

Tungsten: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து; 'ஸ்டாலின் டு அண்ணாமலை' அரசியல் தலைவர்கள் கருத்து

post image
மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு விடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏலம் விடப்பட்ட நாள்முதல், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள், விவசாயிகள் நீண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். இது குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக டெல்லி அழைத்துச் சென்றது. முன்னதாக தமிழக அரசும் சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருந்தது. இந்நிலையில் நீண்ட போராட்டம் மற்றும் பேச்சு வார்த்தைக்குப் பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து

இந்த மகிழ்ச்சியான செய்தியை அரிட்டாபட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த முடிவை அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்றுப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை எம்.பி, சு.வெங்கடேசன்

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மதுரை எம்.பி, சு.வெங்கடேசன், "டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து! ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களின் மகத்தான வெற்றி.ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளையும், தமிழக பா.ஜ.க.வின் மடைமாற்றும் உத்திகளையும் நம்பாமல் தமிழர் வரலாற்றுப் பெருமைகளையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் காக்கும் நோக்கில் மதுரை மக்கள் காட்டிய உறுதிப்பாடுக்கு முன் இன்று ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது. எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்தி இயற்கை வளங்களை வேதாந்தாவுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை மக்களின் போராட்டம் உடைத்து நொறுக்கியுள்ளது." என்று நீண்ட பதிவினைப் பதிவிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "பாரத பிரதமர் மோடி ஐயா அவர்களுக்கு நன்றி. அரிட்டாபட்டி, மேலூர் பகுதி கிராம மக்கள் இன்றுமுதல் நிம்மதியாகத் தூங்குவார்கள். டங்ஸ்டன் இந்தியாவிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. அதைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். இருப்பினும், மக்களின் நலம் கருதி, விவாசாய நிலத்தின் முக்கியத்துவம் கருதி மத்திய அரசு இதை ரத்து செய்துள்ளது" என்று பேசியிருக்கிறார்.

திருச்சி சிவா

எம்.பி. திருச்சி சிவா, "தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாகவும், அரிட்டாபட்டி மக்களின் போராட்டத்தின் காரணமாகவும் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்துள்ளது. இது நமது வரலாற்றில் மிக முக்கியமான நாள்" என்று கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது! இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது!" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் '#டங்ஸ்டன்தடுப்போம், #மேலூர்காப்போம்' என்ற வாசகம் பதிந்த மாஸ்க் அணிந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதுடன்

இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் விடியா திமுக-வின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்" என்று கூறியுள்ளார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "மதுரை அரிட்டாப்பட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்படுவது, முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை. மண்ணைக் காக்க தீரத்துடன் ஓரணியில் திரண்டு பேரெழுச்சியாக அறப்போர் புரிந்த மதுரை மக்களுக்கு என்னுடைய புரட்சிகர வாழ்த்துகள்!" என்று கூறியிருக்கிறார்.

Vikatan Play

விரிவாக பேசுகிறது மதன் எழுதிய Blockbuster தொடரான வந்தார்கள் வென்றார்கள் நூல். இப்போது நீங்கள் Vikatan Play-ல் இலவசமாக audio வடிவில் கேட்கலாம்

Vikatan App ஐ Download செய்யுங்க வந்தார்கள் வென்றார்கள் புத்தககத்தைக் கேளுங்க

வந்தார்கள் வென்றார்களை Audio வடிவில் கேட்க

வந்தார்கள் வென்றார்கள்

US: பிப் 19-க்குள் குழந்தை பெற அவசரம் காட்டும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்...

அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு தனது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் டொனால்டு ட்ரம்ப்.அதில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்பு ‘பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க க... மேலும் பார்க்க

Union Budget 2025: 'புதிய பெருமையை பெறும் நிர்மலா சீதாராமன்... இவருக்கு முன்பு யார்?!'

இந்த நிதியாண்டின் பட்ஜெட் இன்னும் சில நாள்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது.2025-2026 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத... மேலும் பார்க்க

Union Budget 2025: 'பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்க்கும் 7 விஷயங்கள்!' - என்னென்ன?!

இந்த ஆண்டு தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் இவை இடம்பெறலாம் என்றிருக்கும் 7 எதிர்பார்ப்புகள்...வருமான வரி விலக்கு வரம்பு நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் இன்னமும் அதிகரிக்கப்படலாம்.மக்கள் அன்றாடம் பயன்படுத்து... மேலும் பார்க்க

ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் காயம்!

ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்த... மேலும் பார்க்க

Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள்; ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்" - சீமான் பதில்

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார்.இந்தப் பேச்சு பெரியார... மேலும் பார்க்க

`எங்களை உட்காரச் சொல்லுங்கள்' - கவனிக்க மறந்த கதைகள்; கள ஆய்வு ரிப்போர்ட்

குடும்ப கஷ்டத்துக்காக நின்னுட்டிருக்கோம்:"காலையில எட்டு மணிக்கு வேலைக்கு வர்றோம். வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறதுக்கு நைட்டு பத்து மணிக்கு மேல ஆயிடும். குறைந்தபட்சமா பார்த்தாலும் ஒரு நாளைக்கு 10 மணி ... மேலும் பார்க்க