மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
பைக் மோதி மூதாட்டி இறந்த வழக்கு: இளைஞருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை
திருவண்ணாமலையில் பைக் மோதி மூதாட்டி இறந்த வழக்கில், இளைஞருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலையை அடுத்த கீழ் அணைக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் சரோஜா (75). இவா், 2022 ஜனவரி 15-ஆம் தேதி திருவண்ணாமலை - மணலூா்பேட்டை சாலை, கீழ் அணைக்கரை பகுதியில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்றாா். அப்போது, அவ்வழியே வேளையாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் சுந்தர்ராஜ் (35) என்பவா் ஓட்டிவந்த பைக் சரோஜா மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சரோஜா, அதே இடத்தில் இறந்தாா். இதுகுறித்து, திருவண்ணாமலை போலீஸாா் வழக்குப் பதிந்து சுந்தர்ராஜை கைது செய்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. புதன்கிழமை (ஜன.22) வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசூா்யா, விபத்து ஏற்படுத்திய சுந்தர்ராஜுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சுந்தர்ராஜை போலீஸாா் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனா்.