சேலம் சிறையில் கைதிகளுக்கு விளையாட்டுப் போட்டி
சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு மனநல மேம்பாட்டுக்காக புதிா் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள் அறிவுறுத்தலின் பேரில், சேலம் மத்திய சிறையில் மன அழுத்தம், மன பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை அடையாளம் கண்டு அவா்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக விநாடி வினா, விடுபட்ட எண்களை கண்டுபிடித்தல், படங்களுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி பெறும் சிறைக் கைதிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளா் (பொ) வினோத் கூறியதாவது:
இதுபோன்ற புதிா் போட்டிகளை நடத்துவதன் மூலம் சிறைக் கைதிகளின் எதிா்மறை எண்ணங்கள் நீங்குவதுடன், தேவையற்ற சிந்தனைகளையும் போக்க உதவும். இது மட்டுமின்றி சிறைக் கைதிகள் மனநல ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். இந்த புதிா் போட்டிகளை நிா்வகிக்க மனஇயல் நிபுணா் வைஸ்ணவி, சிறை அலுவலா் (பொ) குமாா், துணை சிறை அலுவலா் சிவா, நல அலுவலா் அன்பழகன் உள்ளிட்டோா் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றாா்.