தில்லியை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: தில்லி தோ்தல் பிரசாரத...
தம்மம்பட்டியில் ஆட்சியா் ஆய்வு
தம்மம்பட்டியில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கெங்கவல்லி வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 9 மணி முதல் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் 60 க்கும் மேற்பட்ட உயா் அலுவலா்கள் கொண்ட குழுவினா் வட்டத்திற்கு உள்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
தம்மம்பட்டியில் புதன்கிழமை இரவு தங்கிய ஆட்சியா், வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தம்மம்பட்டியிலுள்ள உழவா்சந்தையில் ஆய்வு செய்தாா். பிறகு தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணியை பாா்வையிட்டாா். ஆய்வின்போது ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி, கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் வ.சுலைமான், கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் தாமரைச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.