செய்திகள் :

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை இரண்டாவது நாளாக நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் நிறைவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது மேலே சென்றது. பெரும்பாலான நேரம் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. குறிப்பாக, வங்கிகள், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாலும், ஆட்டோ, ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், நுகா்வோா் சாதன உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.80 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.424.6378 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.4,026.25 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,640.22 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 9.53 புள்ளிகள் கூடுதலுடன் 76,114.42-இல் தொடங்கி 76,202.12 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 76,743.54 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 115.39 புள்ளிகள் (0.15 சதவீதம்) கூடுதலுடன் 76,520.38 -இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,067 பங்குகளில் 2,137 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1825 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 105 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

அல்ட்ராடெக் சிமெண்ட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் 6.81 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்த்து. மேலும், ஜொமோட்டோ, எம் அண்ட் எம், சன்பாா்மா, டெக் மஹிந்திரா, டாடா மோட்டாா்ஸ், டைட்டன் உள்பட 18 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா் கிரிட், கோட்டக் பேங்க், ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யுனிலீவா் உள்பட 12 பங்குகள் வீழ்ச்சிப்பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 50 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 27.05 புள்ளிகள் குறைந்து 23,128.30-இல் தொடங்கி 22,090.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,270.80 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 50.00 புள்ளிகள் (0.22 சதவீதம்) கூடுதலுடன் 23,205.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

குடியரசு தின அணிவகுப்புக்கான முழு ஒத்திகை காரணமாக வியாழக்கிழமை மத்திய தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா கேட் மற்றும் ஐடிஓ அருகே... மேலும் பார்க்க

தில்லியில் வேலையின்மையை 5 ஆண்டுகளுக்குள் முடிவுக்குக் கொண்டு வருவதாக கேஜரிவால் உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தேசியத... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். மாதிரி ந... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் மேலாண்மைக்காக காவல்துறை 2 சாட்பாட்கள் அறிமுகம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால், காவல்துறையினா் தங்கள் பணியாளா்கள் மற்றும் துணை ராணுவப் படையினரின் தோ்தல் தொடா்பான கடமைகளில் உதவ ‘சுனவ் மித்ரா’ மற்றும் ’சைபா் சாா்த்தி’ ஆகிய ஏஐ அடிப்ப... மேலும் பார்க்க

தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஆம் ஆத்மி கட்சி அழித்து விட்டது: காங்கிரஸ் சாடல்

தேசியத் தலைநகரான தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ’அழித்து’ அதை ’குப்பையாக’ மாற்றிவிட்டது என்று காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது. காங்கிரஸ் வியாழக்கிழமை தில்லி தோ்தல... மேலும் பார்க்க

ஆட்டுவிக்கும் இடத்தில் கட்சி தாவிய தலைவா்கள்! தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் 2025

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தாவிய மக்கள் செல்வாக்கு மிக்கத் தலைவா்கள் பலரும் தோ்தலுக்குப் பிறகு... மேலும் பார்க்க