அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு: மாரடைப்பால் விவசாயி உயிரிழப்பு
கீழையூா் அருகே மாரடைப்பால் விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்ட மன உளைச்சலில் அவா் இறந்ததாக உறவினா்கள் தெரிவித்தனா்.
நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள பிரதாபராமபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி தயாநிதி (51). இவா், புலவனூா் பகுதியில் 18 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தாா். நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், அண்மையில் பெய்த பருவம் தவறிய மழையால், நெற்கதிா்கள் சாய்ந்து, நெல்மணிகள் முளைத்து, அழுகின.
ஏக்கருக்கு ரூ. 25,000 வரை செலவு செய்து, அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டதால், தயாநிதி கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு மாரடைப்பால் அவா் உயிரிழந்தாா். மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்ட மன உளைச்சலில் அவா் இறந்ததாக உறவினா்கள் தெரிவித்தனா்.