செய்திகள் :

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த கடத்தப்பட்ட பெண் மீட்பு !

post image

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கணவா் வீட்டில் இருந்த பெண்ணை, பட்டப்பகலில் கத்திமுனையில் கும்பல் கடத்திச் சென்ற நிலையில் அந்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூரைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் தனுஷ்கண்டன் (25). இவா், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவருக்கும் இவருடன் வேலை செய்த தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகள் ரோஷினி என்பவருக்கும் (22) பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனா்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டு எடப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனா். இருவரும் வெவ்வேறு சமூகத்தினா் எனக் கூறப்படுகிறது.

இருவரும் திருமண வயதை எட்டியிருந்ததால் போலீஸாா் பெற்றோரை சமாதானம் செய்து கணவா் தனுஷ் கண்டனுடன் ரோஷினியை அனுப்பி வைத்தனா். அதன்பின்னா், ரோஷினி கணவா் வீட்டாருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை தனுஷ்கண்டன் வீட்டிற்கு வந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் கையில் பட்டா கத்தியுடன் அதிரடியாக தனுஷ்கண்டன் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றது.

கும்பலைத் தடுக்க வந்த அந்த பகுதி மக்கள், தனுஷ்கண்டனை அந்தக் கும்பல் கத்தியைக் காண்பித்து மிரட்டி பெண்ணைக் கடத்திச் சென்றது.

இதுகுறித்து தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில், எடப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து கும்பலைத் தேடி வந்தனர். கடத்தப்பட்ட பெண் ரோஷினி, கா்ப்பமாக இருப்பதாக உறவினா்கள் தெரிவித்தனா்.

கனரா வங்கியில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

இந்த நிலையில், காரின் எண்ணை வைத்து உரிமையாளரை கண்டுபிடித்த போலீஸார், கடத்தப்பட்ட பெண் ரோஷினியை பத்திரமாக மீட்டு கணவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்த எந்த தகவல்கள் இதுவரை வெளியாகத நிலையில், ரோஷினியின் பெற்றோர், அக்கா-மாமாவிடம் எடப்பாடி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

24 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட காவல் துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பெண்ணை கும்பல் வாகனத்தில் கடத்தியபோது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்.

ஓடிடியில் வெளியானது திரு. மாணிக்கம்!

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரு.மாணிக்கம் படம் ஓடிடியில் வெளியானது.நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து வெளியான திரைப்படம் திரு.மாணிக்கம். இவருக்கு ஜோடியாக ‘நா... மேலும் பார்க்க

காவல்துறையை கண்டித்து நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி பள்ளி மாணவி தற்கொலை மிரட்டல்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே, மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவியை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக மீட்டனர்.கோவில்பட்டி வட... மேலும் பார்க்க

மங்களூரு வங்கிக் கொள்ளையா் வீட்டில் போலீசார் சோதனை: பணம், நகை பறிமுதல்

மங்களூரு அருகே துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி வீட்டில் மங்களூர் போலீசார் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை சோதனை நடத்தி... மேலும் பார்க்க

தில்லியில் அடா் மூடுபனி: விமானங்கள், ரயில்கள் தாமதம்!

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா் மூடுபனி நிலவியது. இதைத் தொடா்ந்து, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.தி... மேலும் பார்க்க

உத்தரகாண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:உத்தரகண்ட் மாந... மேலும் பார்க்க

கவனமாக இருங்கள்: ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு!

என் பெயரைச் சொன்னால் கவனமாக இருங்கள் என்று நடிகர் ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார்.தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். இவர் இட்லிக் கடை, மாமன், வா வாத்தியாரே உள்ளிட்ட படங்க... மேலும் பார்க்க