செய்திகள் :

ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

post image

ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏவான பல்ஜீத் சிங்குக்கு எதிரான பணமோசடி விசாரணையில் அமலாக்கத் துறை பல இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் தௌசா மற்றும் ஹரியாணாவில் உள்ள ரேவாரி உள்பட மொத்தம் ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

பெஹ்ரோரின் (ராஜஸ்தான்) முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக பல்ஜீத் சிங் இருந்தார். அவருக்கு எதிரான வழக்கில் சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை தொடர்பாக முன்னாள் எம்எல்ஏவை உடனடியாக தொடர்புகொள்ள முடியவில்லை. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாகக் கூறி எம்எல்ஏ நிதியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேஜரிவாலைக் கொல்ல பாஜக சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

பாஜக தலைமையிலான மத்திய அரசும் தில்லி காவல்துறையும் அரவிந்த் கேஜரிவாலை கொல்ல சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியதுடன், பஞ்சாப் காவல்துறையால் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப்பெற தேர்தல... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் உள்ள பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர்.பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்துக்கு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்... மேலும் பார்க்க

சஞ்சய் ராயின் தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ மேல்முறையீட்டு மனு!

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று(ஜன. 24) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொல்கத்தா ஆர்.ஜி. கர் மர... மேலும் பார்க்க

நாசிக் திரியம்பகேஷ்வர் கோயிலில் அமித் ஷா வழிபாடு!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரியம்பகேஷ்வர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தார்.மகாராஷ்டிர மாநிலத்திற்கு ஒரு நாள் பயணமாக வந்துள்ள அமித் ஷா, 12 ஜோதி... மேலும் பார்க்க

ரயில் கழிப்பறையில் கழுவப்பட்ட டீ கேன்! வைரல் விடியோ!

ரயில் கழிவறையில் டீ விற்கும் கேனை கழுவிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.ரயில் பயணம் என்பது வெறும் பயணம் மட்டும் அல்ல, பலருக்கு மறக்கமுடியாத நினைவுகளாக இடம்பெறுகின்றது. ஆனால், சமீபகாலமாக ரயிலி... மேலும் பார்க்க

யமுனை நீர் விவகாரம்: யோகி ஆதித்யநாத்துக்கு அகிலேஷ் யாதவின் பதிலடி!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கிய பேசிய நிலையில், அதற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். தலைநகரில் சட்டப்பே... மேலும் பார்க்க