செய்திகள் :

யமுனை நீர் விவகாரம்: யோகி ஆதித்யநாத்துக்கு அகிலேஷ் யாதவின் பதிலடி!

post image

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கிய பேசிய நிலையில், அதற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

தலைநகரில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் பாஜகவுக்காக ஆதரவாக வியாழக்கிழமை ஆதித்யநாத் தில்லியின் கிராரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், மதுரா-பிருந்தாவனில் உள்ள பக்தர்களும் புனிதர்களும் ஆம் ஆத்மியின் "பாவங்களுக்கு" பலியாகின்றனர், ஏனெனில் யமுனை நீர் அழுக்கு வடிகாலாக மாநிலத்தை அடைகிறது. இதன் மூலம் கேஜரிவால் பாவம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

நமாமி கங்கை திட்டத்தின் கீழ் யமுனையின் தூய்மைக்காக ஆம் ஆத்மி கட்சியும், மத்திய அரசும் ஒருபோதும் ஒத்துழைக்கவில்லை. மேலும், புதன்கிழமை பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் நீராடிய உ.பி முதல்வர், கேஜரிவாலும் அவரது அமைச்சர்களும் யமுனையில் குளிப்பார்களா? என்று கேள்வி எழுப்பியதோடு, தார்மீக தைரியம் இருந்தால் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று ஆதித்யநாத் கூறினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

மற்றவர்களுக்கு சவால் விடுவதற்கு முன், யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் மதுரா வழியாகப் பாயும் யமுனையிலிருந்து தண்ணீரைப் பருக வேண்டும் என்று ஹிந்தில் பதிவிட்டுள்ளார்.

தில்லியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட இந்தியாக் கூட்டணியின் அங்கங்களாகும்.

ஜம்மு-காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணத்துக்குக் காரணம் விஷம்?

ரஜெளரி/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தின் பின்னணியில் விஷம்தான் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதாக... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைப் பார்வையிடத் திட்டமிடும் மக்களுக்கு குஜராத் அரசு சிறப்பு சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா ... மேலும் பார்க்க

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். உத்தரகண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அ... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கு! கைதானவருக்கு போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு

நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் கைதான ஷரீஃபுல்லுக்கு போலீஸ் காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷரீஃபுல்லி காவல் முடிவடைந்ததையடுத்து அவர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? - ஆ. ராசா பேட்டி

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏன் என திமுக எம்.பி. ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்க... மேலும் பார்க்க

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக ஹரி ஹரநாத சர்ம மற்றும் ஓய். லக்ஷமன ராஷ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாக்கூர் புதிய க... மேலும் பார்க்க