செய்திகள் :

மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!

post image

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைப் பார்வையிடத் திட்டமிடும் மக்களுக்கு குஜராத் அரசு சிறப்பு சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது.

ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. கடந்த 11 நாள்களில் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடி மகிழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மகா கும்பமேளாவுக்குச் செல்ல சிறப்பு சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது குஜராத் அரசு..

இதுதொடர்பாக உள்துறை மற்றும் போக்குவரத்துத் துணை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறுகையில்,

இந்த சுற்றுலாத் தொகுப்பின் கீழ், அகமதாபாத்தில் உள்ள ராணிப் பேருந்து பணிமனையிலிருந்து தினமும் காலை 7 மணிக்கு பிரயாக்ராஜுக்கு ஏசி வால்வோ பேருந்து புறப்படும்.

ஜனவரி 27-ஆம் தேதி காலை ராணிப் பணிமனையிலிருந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் முதல் பேருந்தை கொடியசைத்துத் துவக்கிய பிறகு இந்த சேவை தொடங்கும்.

இந்து சனாதன தர்மத்தில் மகா கும்பமேளா சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த மாபெரும் நிகழ்வைப் பார்வையிட விரும்பும் குஜராத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்வதற்காக, குஜராத்திலிருந்து பிரயாக்ராஜுக்கு ஒவ்வொரு நாளும் ஏசி வால்வோ பேருந்துகளை இயக்க மாநில அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது.

அகமதாபாத் மற்றும் பிரயாக்ராஜ் இடையேயான தூரம் கிட்டத்தட்ட 1,200 கி.மீ. என்பதால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவபுரியில் ஒரு இரவு பேருந்து நிறுத்தப்படும் என்றும், சிவபுரியில் தங்குவதும் இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

குஜராத் பக்தர்களுக்காக ஒரு நபருக்கு ரூ. 8,100-க்கு மூன்று இரவுகள் மற்றும் 4 பகல்கள் கொண்ட தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இது குஜராத் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.

இந்தத் தொகுப்பில் பயணம் மற்றும் தங்குதல் ஆகியவை அடங்கும். மேலும் மூன்று இரவுகளுக்கான தங்குமிடம் மற்றும் பேருந்து பயணம் ஆகியவை அடங்கும், மேலும் பிரயாக்ராஜில் ஒரு இரவு தங்குவதற்கு குஜராத் பெவிலியன் தங்குமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த பிரயாக்ராஜ் தொகுப்பை ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 25 முதல் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் வலைத்தளமான www.gsrtc.in மூலம் பதிவு செய்யலாம்.

புனித மகா கும்பமேளாவைக் குஜராத் மாநில மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. பிரயாக்ராஜுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால், சூழ்நிலைக்கு ஏற்ப நேரமும் வசதிகளும் மாறக்கூடும் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் பலி?

பாகிஸ்தான் காவல்துறையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறையில் உயிரிழந்தார்.இந்தியாவைச் சேர்ந்த மீனவர் பாபுவை 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், சிறைக்க... மேலும் பார்க்க

லட்ச ரூபாய் முதலீட்டில் கோடிகளை அளித்த 2 நிறுவனங்கள்!

மெர்க்குரி இவி டெக் லிமிடெட் மற்றும் பிரவேக் லிமிடெட் நிறுவனங்கள், தங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் அளித்துள்ளது.மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான மெர்க்குரி இவி டெக் லிமிடெட் (Mercury EV-Tech Limi... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணத்துக்குக் காரணம் விஷம்?

ரஜெளரி/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தின் பின்னணியில் விஷம்தான் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதாக... மேலும் பார்க்க

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். உத்தரகண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அ... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கு! கைதானவருக்கு போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு

நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் கைதான ஷரீஃபுல்லுக்கு போலீஸ் காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷரீஃபுல்லி காவல் முடிவடைந்ததையடுத்து அவர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? - ஆ. ராசா பேட்டி

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏன் என திமுக எம்.பி. ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்க... மேலும் பார்க்க