லட்ச ரூபாய் முதலீட்டில் கோடிகளை அளித்த 2 நிறுவனங்கள்!
மெர்க்குரி இவி டெக் லிமிடெட் மற்றும் பிரவேக் லிமிடெட் நிறுவனங்கள், தங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் அளித்துள்ளது.
மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான மெர்க்குரி இவி டெக் லிமிடெட் (Mercury EV-Tech Limited) நிறுவனத்தின் பங்கின் விலை, 2022 ஆம் ஆண்டிலிருந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இந்த நிறுவனம், தனது முதலீட்டாளர்களுக்கு கடந்த 3 ஆண்டில் மட்டும் 9,900 சதவிகித லாபத்தை அளித்துள்ளது.
இந்த நிறுவனடப் பங்கின் விலை ரூ. 0.85-லிருந்து தற்போது ரூ. 85-ஆக உயர்ந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நிறுவனத்தின் பங்குகளில் ஒருவர் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று ஒரு கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும்.
இதையும் படிக்க:உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு என்ன சொல்கிறார் டிரம்ப்?
அதுமட்டுமின்றி, சொகுசு விடுதி நிறுவனமான பிரவேக் லிமிடெட் (Praveg Ltd) நிறுவனத்தின் பங்குகளும் சமீபத்தில் உயர்ந்துள்ளன. இந்த நிறுவனப் பங்கின் விலை 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 2.35-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 703-க்கு என்ற நிலையில் அதிகரித்துள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனத்தின் பங்கு 5 ஆண்டுகளில் 29,814 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரிய வருகிறது.
5 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது ரூ. 3 கோடியாக அதிகரித்திருக்கும்.
எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.