செய்திகள் :

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் பலி?

post image

பாகிஸ்தான் காவல்துறையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறையில் உயிரிழந்தார்.

இந்தியாவைச் சேர்ந்த மீனவர் பாபுவை 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், சிறைக்காலம் முடிந்தும் சிறையிலேயே வைக்கப்பட்ட பாபு, கராச்சி சிறையில் இன்று உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாபு தவிர்த்து, 180 இந்திய மீனவர்கள் விடுவிப்பு பட்டியல் காத்திருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் பாபுவோடு சேர்த்து பாகிஸ்தான் சிறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாகவே மீனவர் விடுவிப்பு பிரச்னை இருந்து வருகிறது.

இதையும் படிக்க:உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு என்ன சொல்கிறார் டிரம்ப்?

போலி தகவல்களை சமூக வலைதளங்கள் தடுக்கவில்லை: தலைமைத் தோ்தல் ஆணையா்

தோ்தல் நடைமுறைகள் குறித்து பகிரப்படும் போலியான தகவல்களை சமூக வலைதளங்கள் தடுக்கவில்லை என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மேலும், பகிரப்படும் தகவல்கள் போலியானது ... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கான புதிய தூதராக ஜிதேந்தா் பால் சிங் நியமனம்

இஸ்ரேல் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக ஜிதேந்தா் பால் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா். ஹமாஸ் - இஸ்ரேல் இடையே காஸாவில் போா்நிறுத்த உடன்பாடு அமலுக்கு வந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு புதிய தூதரை இந்தியா ந... மேலும் பார்க்க

அயோத்தி: அரசு நிா்வாகத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு பாகுபாடு - அகிலேஷ் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி, அரசு நிா்வாகத்தில் பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா், பட்டியலினத்தவா்கள் பணியமா்த்தப்படுவதில் பாகுபாடு உள்ளதாக அந்த மாநில முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவர... மேலும் பார்க்க

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. திடீா் ராஜிநாமா: அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு

ஆந்திர எதிா்க்கட்சியான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் பொதுச் செயலரும் மாநிலங்களவை எம்.பி.யுமான விஜயசாய் ரெட்டி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாகவும், அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

நாளை குடியரசு தினம்: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் இன்று உரை

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை இரவு 7 மணியளவில் உரையாற்றவுள்ளாா். நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை 100-ஆக சரிப்பதே பிரதமா் மோடியின் இலக்கு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘கடந்த பத்தாண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 50 சதவீதம் வரை கடுமையான சரிவை சந்தித்துள்ளது; ஒரு டாலருக்கு ரூ.100 என்கிற அளவில் ரூபாய் மதிப்பைக் குறைக்கும் இலக்கை நோக்கியே பிரதமா் மோடி ச... மேலும் பார்க்க