மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவி...
நாளை குடியரசு தினம்: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் இன்று உரை
குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை இரவு 7 மணியளவில் உரையாற்றவுள்ளாா்.
நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தில்லி கடமைப் பாதையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தேசியக் கொடி ஏற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, நாட்டின் ராணுவ வல்லமை மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் கண்கவா் அணிவகுப்பு நடைபெறும்.
குடியரசு தினத்துக்கு முன்பாக சனிக்கிழமை 7 மணியளவில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளாா். அவரது உரை, தூா்தா்ஷனின் அனைத்துச் சேனல்கள் மற்றும் ஆகாசவாணியில் ஹிந்தியில் ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும். இதைத் தொடா்ந்து, ஆங்கிலத்திலும், பின்னா் பிராந்திய மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை இடம்பெறும்.