Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
‘சங்கல்ப் பத்ரா’ முன்னெடுப்பு: பெற்றோரை வாக்களிக்க ஊக்குவிக்கும் பள்ளி குழந்தைகள்
தில்லியில் பள்ளி குழந்தைகள் மூலம் பெற்றோரை வாக்களிக்க ஊக்குவிக்கும் ‘சங்கல்ப் பத்ரா’ (உறுதிமொழிக் கடிதம்) முன்னெடுப்பை தோ்தல் அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.
இது தொடா்பாக தில்லி கல்வித் துறை இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘சங்கல்ப் பத்ரா’ என்ற உறுதிமொழிக் கடிதம், பள்ளி மாணவா்களை தோ்தலின்போது பெற்றோரையும் குடும்ப உறுப்பினா்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி வாக்குப் பதிவு நாளில் வாக்களிக்க பெற்றோருக்கு ஒரு தாா்மீக நினைவூட்டலாகச் செயல்படும்.
கையொப்பமிடப்பட்ட உறுதிமொக் கடிதத்தின் படிவங்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதையும் சேகரிப்பதையும் உறுதி செய்வதற்கான ஒரு அமைப்பை பள்ளிகள் நிறுவ வேண்டும். பெற்றோரால் கையொப்பமிடப்பட்ட உறுதிமொழி படிவங்கள் பள்ளி அதிகாரிகளால் சேகரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கூடுதலாக, கையொப்பமிடப்பட்ட படிவங்களின் சேகரிப்பைக் கண்காணிக்க ‘கூகிள் மென்பொருள்’ படிவம் போன்ற கண்காணிப்பு பொறிமுறையை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தில்லியில் பிப். 5-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது பெற்றோா் வாக்களிப்பதை உறுதி செய்வது போன்ற வாசகங்கள் இந்த உறுதிமொழிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தன.