Thai Amavasai | தை அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாத சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன...
பிரபல மலையாள இயக்குநர் ஷஃபி காலமானார்!
திருவனந்தபுரம் : மலையாள இயக்குநர் ஷஃபி இன்று(ஜன. 26) காலமானார். அவருக்கு வயது 56.
ஷஃபிக்கு பக்கவாதம்(ஸ்ட்ரோக்) ஏற்பட்டதால் கொச்சியில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொங்கலுக்குப்பின், கடந்த 16-ஆம் தேதியிலிருந்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
1995-ஆம் ஆண்டு ‘ஆதியத்தே கண்மணி’ மலையாள திரையுலகுக்கு அறிமுகமானவர் ஷஃபி. அதனைத்தொடர்ந்து, கடந்த 30 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ளார். இவருடைய அண்ணன் ரஃபியும் உறவினரான சித்திக்கும் மலையாள திரையுலகில் நன்கு அறியப்பட்ட முகங்களாகும்.
கடந்த 2001-ஆம் ஆண்டு ’ஒன் மேன் ஷோ’ திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷஃபி. தனது திரைக்கதையில் நகைச்சுவைக்கு அதிகம் முக்கியத்துவமளித்து படமாக்குவதில் கில்லாடி எனப் பெயர் எடுத்தவர் ஷஃபி.
இந்த நிலையில், அவரது மறைவு மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் பலரும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.