செய்திகள் :

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள்; பழமை மாறாமல் பொருத்தப்பட்ட 9 கலசங்கள்!

post image

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும்  சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள். இக்கோயிலில் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி நிதி மற்றும் தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜகோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. இதையடுத்து 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

ராஜ கோபுரத்தில் பொருத்தப்பட்ட கலசங்கள்

இதில் ராஜ கோபுரத்தில் கீழ்த்தள பகுதிகள், தூண்கள் புதுப்பிக்கும் பணிகளும், ராஜகோபுரத்தில் உள்ள 9 கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும், கோபுரக் கலசங்களில் உள்ள வரகு தானியங்களை மாற்றுவதற்காகவும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோபுரத்திலிருந்த 9 கலசங்களும் கழற்றி கீழே கொண்டு வரப்பட்டது.  ராஜ கோபுரத்தின் கும்ப கலசங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அப்பணிகள் நிறைவுற்றுள்ளது. இதற்கு முன்பு இக்கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதற்காக பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கும்ப கலசங்களை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 9 கலசங்களும் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டது.  முன்னதாக புதுப்பித்து வைக்கப்பட்டிருந்த 9 கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து கும்பகலசங்கள் அனைத்தும் ராஜகோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து கோபுரத்தின் உச்சியில் அனைத்து கலசங்களும் பொருத்தப்பட்டது. அடுத்த சில நாள்களில் ராஜகோபுரத்திற்கு வெள்ளை அடிக்கும் பணி தொடங்கப்பட  உள்ளது. வரும் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகத்தன்று கும்ப கலங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

`பகை விலக்கி பலம் சேர்க்கும்' தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில் 7 அபூர்வ பலன்கள்; சங்கல்பியுங்கள்

பகை விலக்கி பலம் சேர்க்கும் தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில்! 7 அபூர்வ பலன்கள்! சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப ப... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 2 மாதத்திற்குப் பிறகு ஆசி வழங்கிய தெய்வானை யானை… மகிழ்ச்சியில் பக்தர்கள்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நா... மேலும் பார்க்க

தொன்மையான கட்டடக் கலை கோயிலில் முருகப்பாஸ் சோழ மண்டலம் - என்ன பணிகள் செய்யப் போகிறார்கள்?

காஞ்சிபுரத்தில் உள்ள மிக தொன்மை வாய்ந்த கைலாச நாதர் திருக்கோயிலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது முருகப்பா குழுமத்தின் ... மேலும் பார்க்க

``1000 வெள்ளத்தாலும் அசைக்க முடியாத முருகன் கோவில்...'' - வியக்க வைக்கும் தொழில் நுட்பங்கள்..!

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன்,... மேலும் பார்க்க

பழநி உபகோயில் கும்பாபிஷேகம்: யூடியூப் சேனலுக்கு வீடியோ கவரேஜ் ஆர்டரா? கொந்தளித்த செய்தியாளர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போதே, ஆகமவிதிகளை மீறி அவசரகதியில் கும்பாபிஷேகம் ... மேலும் பார்க்க

இசையால் விழாக்கோலம் பூண்ட திருவையாறு... தியாகராஜ ஆராதனை; பஞ்சரத்தின கீர்த்தனை பாடி இசையஞ்சலி!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் வட கரையில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இசை மேதை ஸ்ரீ சத்குரு தியாகராஜர் சமாதி அமைந்துள்ளது. அந்த இடத்தில் கோயில் எழுப்பி ஸ்ரீ சத்குரு தியாகராஜர் சிலை ... மேலும் பார்க்க