செய்திகள் :

குடியரசு நாள் விழா: பிரதமர் மோடி வாழ்த்து!

post image

புது தில்லி : இந்தியத் திருநாட்டின் 76-ஆவது குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘ஒரு ஜனநாயக நாடாக 75 பொன்னான ஆண்டுகள் நாம் திகழுவதை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். நமது அரசமைப்பை உருவாக்கிய மேன்மைமிக்க அனைத்து மனிதர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறோம். ஜனநாயகத்திலும் ஒற்றுமையிலும் நமது பயணம் வேரூன்றி இருப்பதை அவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

நமது அரசமைப்பின் சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை இத்தருணம் பலப்படுத்துவதாக அமையட்டும். மேலும், செழிப்பானதொரு வலிமையான நாடாக இந்தியாவை கட்டமைக்கும் நமது முயற்சிகளுக்கும் இத்தருணம் பலத்தை தரட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தரப்பில் கூறப்பட்டதாவது: குஜராத் ம... மேலும் பார்க்க

வெளியுறவுச் செயலா் மிஸ்ரி சீனா பயணம்

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடு... மேலும் பார்க்க

உத்தரகண்ட் உள்ளாட்சித் தோ்தலில் பாஜக வெற்றி 11-இல் 10 மேயா் பதவிகளைக் கைப்பற்றியது

உத்தரகண்ட் மாநில நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 11 மாநகராட்சிகளில் 10 மேயா் பதவிகளை பாஜக கைப்பற்றியது. ஓரிடத்தில் சுயேச்சை வேட்பாளா் மேயரானாா். ... மேலும் பார்க்க

பிகாா்: குரங்குகள் தள்ளிவிட்டதில் மாடியில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

பிகாரில் குரங்குகள் தள்ளிவிட்டதில் வீட்டின் மாடியில் இருந்து விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிகாரின் சிவான் மாவட்டத்தில் மகா் கிராமத்தைச் சோ்ந்த பிரியா குமாா் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்! முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவிப்பு

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை (ஜனவரி 27) முதல் அமலுக்கு வருவதாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும... மேலும் பார்க்க

14-ஆவது நாளில் மகா கும்பமேளா : ஒரு கோடிக்கும் அதிகமானோா் புனித நீராடல்

மா. பிரவின்குமாா்உத்தர பிரேதச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் 14-ஆவது நாளில் 1.74 கோடிக்கும் அதிகமானோா் புனித நீராடினா்.கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் ச... மேலும் பார்க்க