செய்திகள் :

Doctor Vikatan: சிறுநீரில் வித்தியாசமான வாடை... சர்க்கரைநோயின் அறிகுறியாக இருக்குமா?

post image

Doctor Vikatan: என் வயது 40. சிறுநீர் கழிக்கும்போது சில சமயங்களில் ஒருவித மருந்து வாடை வருகிறது.  சில சமயங்களில் வேறு வேறு வாடை வருகிறது. இது சுகர் இருப்பதற்கான அறிகுறியா? சிறுநீர் வாடைக்கு என்ன காரணம்.... எந்த வாடை ஏன் ஏற்படுகிறது என்று ஒருவரால் கண்டுபிடிக்க முடியுமா?  இதற்கு சிகிச்சை அவசியமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா

மருத்துவர் நிவேதிதா

சிறுநீரில் வேறு வேறு வாடை அடிப்பதாகச் சொல்கிறீர்கள். மருந்து வாடை அடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.  வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?, அப்படி சில மருந்துகள் சிறுநீரில் வாடையை ஏற்படுத்தலாம். வாடையோடு சேர்த்து வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பாருங்கள்.

அதாவது, வாடை தவிர, சிறுநீரில் எரிச்சலோ, சிறுநீர் கழிக்கும்போது வலியோ, அடிவயிற்றில் வலியோ, சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவதோ, கலங்கலாக  வெளியூறுவதோ இருக்கிறதா என்று பாருங்கள். இப்படி எல்லாம் இருந்தால், உங்களுக்கு யூரினரி இன்ஃபெக்‌ஷன் இருக்கலாம் என சந்தேகப் படலாம். நாம் உண்ணும் உணவுகளும் சிறுநீரின் நிறம் மற்றும் மாற்றக்கூடும். உதாரணத்துக்கு, பீட்ரூட் சாப்பிட்டால் சிலருக்கு சிறுநீரின் நிறம் மாறும்.

யூரின் ரொட்டீன் என்ற டெஸ்ட்...

குறிப்பிட்ட உணவு அல்லது பானம் எடுத்துக்கொள்ளும் போதெல்லாம் சிறுநீரில் வாடையை உணர்கிறீர்களா என்று கவனியுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுநீர் கழிக்காதது இரண்டும் சிறுநீரின் நிறம் மற்றும் வாடையை மாற்றலாம். யூரின் ரொட்டீன் என்ற டெஸ்ட் எல்லா லேப்களிலும் செய்யப்படும். அதைச் செய்து பார்ப்பதன் மூலம், எப்படிப்பட்ட அணுக்கள் வெளியேறுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம். ரிசல்ட்டை பொறுத்து, தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட வேறு சோதனைகளைச் செய்து கொள்ளலாம். இன்ஃபெக்ஷன் இருப்பது உறுதியானால், மருத்துவரின் ஆலோசனையோடு அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்டம்! | Photo Album

சென்னையில் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டம்சென்னையில் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டம்சென்னையில் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டம்சென்னையில் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டம்சென்னையில் 76-வது குடியர... மேலும் பார்க்க

Republic Day: 76-வது குடியரசு தினம்; பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பாபா சாகேப் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 76-ம் ஆண்டின் குடியரசுத் தினம் இன்று. நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த தினத்தில் பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்... மேலும் பார்க்க

Republic Day: ``இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு.." -குற்றச்சாட்டுகளுடன் ஆளுநர் உரை!

பாபா சாகேப் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 76-ம் ஆண்டின் குடியரசுத் தினம் இன்று. நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த தினத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நா... மேலும் பார்க்க

வேங்கைவயல்: கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லையா? | DMK | TVK VIJAY | Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - வேங்கைவயல் - வழக்கின் முழு விவரங்கள்!* - வேங்கைவயல்: "தமிழ்நாடு அரசு சொல்வது தவறு; அதை சிபிஐயிடம் ஒப்படைக்கவும்" - சிபிஎம்மின் பி. சண்முகம் வலியுறுத்துகிறார்* - வேங்கைவயல்: ... மேலும் பார்க்க

Republic Day: முதல்முறையாக குடியரசு தினம் கொண்டாடும் இந்தியாவின் 12 கிராமங்கள்! - பின்னணி என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'நக்சலைட் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், நக்சலைட், மாவோயிஸ்ட் நடமாடும் பகுத... மேலும் பார்க்க