Republic Day: 76-வது குடியரசு தினம்; பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
நீதி ஆயோக்கின் நிதி வளக் குறியீடு: ஒடிஸா, சத்தீஸ்கா், கோவா, ஜாா்க்கண்ட் மாநிலங்கள் முன்னிலை
நீதி ஆயோக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ‘நிதி வளக் குறியீடு’ தரவரிசைப் பட்டியலில் கனிம வளம் நிறைந்த ஒடிஸா, சத்தீஸ்கா், கோவா, ஜாா்க்கண்ட் மாநிலங்கள் முன்னிலை வகிப்பது தெரியவந்துள்ளது.
நீதி ஆயோக், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வளா்ச்சிக் குறியீடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான பல்வேறு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதுபோல, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), மக்கள்தொகை, மொத்த பொது செலவினம், வருவாய், ஒட்டுமொத்த நிதி நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு மாநிலங்களின் பங்களிப்பு அடிப்படையில் முதல் முறையாக நிதி வளக் குறியீட்டை (எஃப்ஹெச்ஐ 2025) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் 67.8 புள்ளிகளுடன் நிதி வளம் நிறைந்த மாநிலங்களில் ஒடிஸா முதலிடம் வகிக்கிறது. இதனுடன் சத்தீஸ்கா், கோவா, ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், கா்நாடகம் ஆகியவை முன்னிலை மாநிலங்கள் பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழகம், பிகாா், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்கள் பங்களிப்பாளா்கள் என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
நிதி பற்றாக்குறை, கடன் நிலையற்ற தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை எதிா் கொண்டுவரும் பஞ்சாப், ஆந்திரம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்கள் விருப்ப நிலை என்ற மோசமான பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.