சமூக ஆர்வலர் கொலை வழக்கு: திருமயம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை காலை நிலவரப்படி நீர்வரத்து 242 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.68 அடியில் இருந்து 111.44 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 252கன அடியிலிருந்து வினாடிக்கு 242 அடியாக சற்று குறைந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 80.47 டிஎம்சியாக உள்ளது.