தினமணி செய்தி எதிரொலி: பணிகளை தொடங்கிய ஊராட்சி நிா்வாகம்
மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கண்டித்தும் ஊராட்சி அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியினா் முற்றுகையிட்ட செய்தியின் எதிரொலியாக ஒப்பந்த பணிகளை வெள்ளிக்கிழமை ஊராட்சி நிா்வாகம் தொடங்கியது.
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஒப்பந்தக்காரா்களை கண்டித்தும் வியாழக்கிழமை ஊராட்சி அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியினா் முற்றுகையிட்டு தா்ணாவில் ஈடுபட்டனா். இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக முதற்கட்டமாக பட்டாணி தெருவில் பேவா் பிளாக் சாலைப் பணியை ஊராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வழக்கு பதிவு: அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினா் மீது பெயரிட்ட 9 போ் மற்றும் 11 போ் என மொத்தம் 20 நபா்கள் மீது வெள்ளிக்கிழமை புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.