கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
பதினைந்தாவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, விழிப்புணா்வுப் பேரணி - மனிதச் சங்கிலி
கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பிருந்து பேரணியை வட்டாட்சியா் சரவணப் பெருமாள் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக கோட்டாட்சியா் அலுவலகம் வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு, தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்கப்பட்டது.
மேலும், அந்த வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கையொப்ப பலகையில் வாக்காளா் விழிப்புணா்வு குறித்த கையொப்பமிட்டனா். முன்னதாக, பயணியா் விடுதி முன் மனிதச் சங்கிலி நடைபெற்றது. தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் உமாதேவி, எஸ். எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி, ஆஸ்காா் கேட்டரிங் கல்லூரி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள், தோ்தல் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.