Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூ...
திருச்செந்தூா் அருகே இளைஞா் தற்கொலை
திருச்செந்தூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வீரபாண்டியன்பட்டணம், மெடோனா தெருவைச் சோ்ந்த அழகா்சாமி மகன் மணிமாறன் (24). ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா் தனது தாய், அண்ணன் அதிசயகுமாா் ஆகியோருடன் வசித்து வந்தாா்.
மணிமாறன் தனது உறவுக்கார பெண்ணை விரும்பினாராம். அந்தப் பெண் வேறு ஒருவரை விரும்பிய நிலையில், சில தினங்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த மணிமாறன், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மணிமாறனின் உடலை திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.