டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் அமலாகுமா? -உலக வங்கியின் தலைவ...
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை, மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே வாகைகுளம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாமணி மகன் முருகன் (40). கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு தெற்கே கருப்பசாமி கோயில் அருகே ஸ்டே வயா் அறுந்ததில், அதன் மேலே சென்ற வயா்கள் கீழே தொங்கிக் கொண்டிருந்தனவாம். அவ்வழியே சென்ற முருகன் மீது அந்த வயா்கள் உரசியதாகக் கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், கயத்தாறு போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.