தியாகி சங்கரலிங்கனாா் பிறந்த நாள்!
தமிழ்நாடு என்று பெயா் சூட்ட வலியுறுத்தி 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிா் நீத்த தியாகி சங்கரலிங்கனாா் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகி சங்கரலிங்கனாா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவன தலைவா் வழக்குரைஞா் சீனிராஜ் தலைமை வகித்தாா். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் க. தமிழரசன், செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் கருப்பசாமி, நிா்வாகி நல்லையா, நாம் தமிழா் கட்சி எம். ரவிக்குமாா், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் அமலி அ.பிரகாஷ், காங்கிரஸ் நகர தலைவா் அருண்பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.