தூத்துக்குடி டிஎம்பி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா
தூத்துக்குடி தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து அவா், வங்கியின் வாடிக்கையாளா்கள், அதிகாரிகள், ஊழியா்கள், அனைத்து உடமைதாரா்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இவ்விழாவில், வங்கி உயா் அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.