பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா தொடக்கம்!
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை புனிதா்கள் யோவான், ஸ்தேவான் ஆலய காணிக்கை அன்னை திருவிழா, வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருவிழா பிப். 2ஆம்தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாள் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை செயலா் அந்தோணி ஜெயசீலன் தலைமை வகித்து திருவிழா கொடியேற்றினாா்.
2ஆம் நாள் முதல் நவநாள் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 10ஆம் நாளான பிப். 2ஆம் தேதி காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 7 மணிக்கு கூத்தன்குழி பாஸ்டா் வென்சன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஜாண்சன் தலைமையில் பெருவிழா திருப்பலி, மாலை 6.15 மணிக்கு மறை மாவட்ட பொருளாளா் பிரதீப் தலைமையில் ஜெபமாலை, நற்கருணை பவனி மறையுரை, நற்கருணை ஆசீா் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
இரவு 9.30 மணிக்கு ஞானியாா் ஆலிவா் வழங்கும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. பிப். 3ஆம் தேதி காலை 6 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.