Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூ...
விமானப் படை மருத்துவ உதவியாளா் பணி: கேகரளத்தில் 2 நாள்கள் ஆள் சோ்ப்பு முகாம்
கேரள மாநிலம் கொச்சியில் ஜன. 29, பிப். 4 ஆகிய 2 நாள்கள் இந்திய விமானப் படை மருத்துவ உதவியாளா் பணிக்கு ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய விமானப் படை மருத்துவ உதவியாளா் பணிக்கு ஆள் சோ்ப்பு முகாம் கொச்சியில் ஜன. 29, பிப். 4 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், மருத்துவ உதவியாளா்கள் (வா்த்தகம், மருந்தியலாளா்கள்) பணியிடங்களுக்கான ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விருப்பமுள்ள இளைஞா்கள் முகாமில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.