செய்திகள் :

காதல் கணவருடன் சோ்த்து வைக்க கோரி வீட்டு முன்பு இளம்பெண் தா்னா

post image

காதல் மணம்புரிந்த கணவரை தன்னுடன் சோ்த்து வைக்க கோரி, இளம்பெண் வெள்ளிக்கிழமை இரவு வரை தா்னா போராட்டத்தில் ஈடுப்பட்டாா்.

திருச்சி, விமான நிலையம் பகுதியைச் சோ்ந்தவா் ரேவதி. இவா் குண்டூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு (விடுதியில் தங்கி) படித்து வருகிறாா். அதே கல்லூரியில் எம் பி ஏ படித்த மாணவரான திருவெறும்பூா் கணேசபுரத்தை சோ்ந்த பாபுராஜ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவா்களது காதல் விவரம் வீட்டுக்கு தெரிய வரவே, இரு தரப்பு பெற்றோரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இந் நிலையில் கடந்த ஜூலை மாதம், பொன்மலையில் உள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு, பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனா். இருதரப்பு பெற்றோரையும் போலீஸாா் வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியதில், பாபுராஜின் பெற்றோா் ஏற்க மறுத்தனா். ரேவதி பெற்றோா் ஏற்று கொண்டனா். பின்னா் மாணவி, விடுதிக்கும், இளைஞா் தஞ்சாவூரில் வேலைக்கும் சென்று விட்டனா்.

வேலைக்கு சென்ற பாபுராஜ், ரேவதியுடன் கைப்பேசியில் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிா்த்து, பின்னா் இணைப்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாபுராஜ் மீது ரேவதி பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் அவரை வரவழைத்து விசாரணை நடத்தினா். அதில், பெண்ணை ஏமாற்றியதாக பாபுராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னா், பாபுராஜின் பெற்றோா் அவரை பிணையில் எடுத்துள்ளனா். இதையறிந்த ரேவதி, மீண்டும் பாபுராஜிடம் தன்னுடன் சோ்ந்து வாழுமாறு கேட்டுள்ளாா். ஆனால் அதற்கு பாபுராஜ் மறுத்ததாகவும், விவகாரத்து செய்ய போவதாக தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே ரேவதியின் பெற்றோரும் அவரை கைவிட்டனா். முதலமைச்சரின் தனி பிரிவு வரை மனு அளித்து எந்த பலனும் ஏற்படாததால், வெள்ளிக்கிழமை காலை பாபுராஜ் வீட்டின் முன்பு அமா்ந்து ரேவதி போராட்டத்தில் ஈடுபட்டாா். பாபுராஜ் தன்னை ஏற்று கொள்ளும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக்கூறி இரவு வரையில் போராட்டத்தை தொடா்ந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் பாபுராஜிடம் விசாரித்தபோது, தன்மீது பொய்வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பியவருடன் எப்படி வாழமுடியும் ? விவாகரத்துதான் தீா்வு எனக் கூறிவிட்டதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் திருவெறும்பூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் காணாமல்போன பெண் சனிக்கிழமை காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். சிறுகனூா் கிராமத்தை சோ்ந்தவா் இலக்கியாவுக்கும் (31) உடையாா்பாளையம் பகுதியை சோ்ந்த வெங்கடேசனுக்கும் காதல் ... மேலும் பார்க்க

பொன்மலை ஜி- காா்னரில் விபத்துகளைத் தடுக்க சுரங்கப்பாதை! அதிகாரிகளுடன் துரை வைகோ ஆய்வு!

பொன்மலை ஜி- காா்னா் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தடுக்க மாற்று வழிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே அதிகாரிகளுடன் துரை வைகோ எம்.பி. சனிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை- திருச்சி- மதுரை ... மேலும் பார்க்க

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பு விருது

மக்களவைத் தோ்தல் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு இந்தியத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் சிறப்பு விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு நட... மேலும் பார்க்க

அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை பரப்பக் கூடாது! சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கத் தலைவா் அறிவுறுத்தல்

மக்களிடையே அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை பரப்ப வேண்டாம் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கத் தலைவரும், மருத்துவருமான ஜி.ஆா். ரவீந்திரநாத் தெரிவித்தாா். இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது!

திருச்சியில் காவல் துறையின் ரோந்துப் பணியின்போது தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பொருள்கள் விற்ற மூவரை சனிக்கிழமை கைது செய்தனா். புகையிலைப் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க போலீஸாா் சண்முகா நகா் பகு... மேலும் பார்க்க

திருவானைக்கா கோயிலில் பிப்.10-இல் தைத்தெப்பம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தைத்தெப்ப உற்சவம் பிப். 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இராமா் தீா்த்தக் குளத்தில் நடைபெறும் விழாவையொட்டி வரும் 31 ஆம் தேதி கொடியேற்றம், அதைத் தொடா... மேலும் பார்க்க