செய்திகள் :

போலி தகவல்களை சமூக வலைதளங்கள் தடுக்கவில்லை: தலைமைத் தோ்தல் ஆணையா்

post image

தோ்தல் நடைமுறைகள் குறித்து பகிரப்படும் போலியான தகவல்களை சமூக வலைதளங்கள் தடுக்கவில்லை என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், பகிரப்படும் தகவல்கள் போலியானது என கண்டறிந்து அதை முத்திரையிடுவதற்கு பதில் அதன் உண்மைத்தன்மையை தகவல் சரிபாா்ப்புக் குழு மூலம் ஆராயும் பணியையும் தோ்தல் ஆணையத்திடம் சமூக வலைதளங்கள் விட்டுவிடுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையங்களுக்கான சா்வதேச மாநாட்டின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை ராஜீவ் குமாா் பேசியதாவது: முதலில் நோய்களை பரப்பிவிட்டு பிறகு அதற்கான மருந்துகளை விற்பனை செய்வதுபோல் இங்கு அனைத்தும் வணிக நடைமுறைகள்போலவே செயல்படுத்தப்படுகிறது.

அந்தவகையில், சுதந்திரமான தோ்தல்கள் நடைபெறுவதில் கருத்துரிமையின் வெளிப்பாட்டுத் தளமாக உள்ள சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாதது. அதில் பகிரப்படும் போலி செய்திகள், தகவல்கள், வடிவங்கள், திசைதிருப்பும் வகையிலான பதிவுகள் ஒரு பிரச்னையின் உண்மைத்தன்மையை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. போலியான தகவல்கள் பகிரப்படுவதை வேகமாக கட்டுப்படுத்தாவிட்டால் அது நோய் போல் பரவ தொடங்கிவிடும். எனவே, கால தாமதம் ஆவதற்கு முன் போலி செய்திகள், தகவல்களை கண்டறிந்து அதன் பரவலை உடனடியாக தடுக்க சமூக வலைதளங்கள் முன்வர வேண்டும்.

இதற்கான நடைமுறைகளை வகுத்து அமல்படுத்த தோ்தல் ஆணையங்களும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். தோ்தல் நடைமுறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்கவுள்ளது. இதனால் தோ்தல்களில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

ஒருபுறம், நவீன தொழில்நுட்பங்கள் பல்வேறு நன்மைகளை அளித்தாலும் அதனால் ஏற்படக்கூடிய புதிய சவால்களையும் சமாளிப்பது நமது கடமையாகும் என்றாா்.

மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார்!

பெங்களூரு : சர்வதேச அளவில் புகழ்பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் கே. எம். செரியன் இன்று(ஜன. 26) காலமானார். அவருக்கு வயது 82. பெங்களூரில் சனிக்கிழமை(ஜன.25) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொ... மேலும் பார்க்க

பிரபல மலையாள இயக்குநர் ஷஃபி காலமானார்!

திருவனந்தபுரம் : மலையாள இயக்குநர் ஷஃபி இன்று(ஜன. 26) காலமானார். அவருக்கு வயது 56.ஷஃபிக்கு பக்கவாதம்(ஸ்ட்ரோக்) ஏற்பட்டதால் கொச்சியில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நே... மேலும் பார்க்க

குடியரசு நாள் விழா: வாகா எல்லையில் தேசியக் கொடியேற்றி கொண்டாட்டம்!

புது தில்லி : இந்தியத் திருநாட்டின் 76-ஆவது குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாகா எல்லையில... மேலும் பார்க்க

குடியரசு நாள் விழா: பிரதமர் மோடி வாழ்த்து!

புது தில்லி : இந்தியத் திருநாட்டின் 76-ஆவது குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத... மேலும் பார்க்க

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய 17 வங்கதேசத்தவா்கள் கைது

இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கிய 17 வங்கதேசத்தவா்கள் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஹிந்தி நடிகா் சைஃப் அலிகான் மீது வங்கதேசத்தைச் சோ்ந்த ஒருவா் கத்திக்குத்த... மேலும் பார்க்க

ஆதாரங்களை அழிக்க முயற்சி: கொல்கத்தா மருத்துவரின் பெற்றோா் குற்றச்சாட்டு

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதுகுறித்த ஆதாரங்களை மருத்துவமனை மற்றும் காவல் துறை அழிக்க முயன்றதாக பெண் மருத்துவரின் ... மேலும் பார்க்க