Republic Day: 76-வது குடியரசு தினம்; பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
கடவுச்சீட்டில் முறைகேடு: மலேசிய பயணி கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து பயணித்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கொடிக்குளத்தை சோ்ந்தவா் எஸ். கதிரேசன் (55 ). இவா் மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில், கதிரேசன் தனது பெயா், தந்தைபெயா், பிறந்த ஊா் உள்ளிட்டவற்றை போலி ஆவணங்கள் மூலம் மாற்றி, கடவுச்சீட்டில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய போலீஸாா் கதிரேசனை கைது செய்தனா்.