கூடைப்பந்து போட்டி: அரசு விளையாட்டு விடுதி அணிக்கு தங்கப் பதக்கம்
மதுரையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தேனி மாவட்ட அரசு விளையாட்டு விடுதி அணியினா் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றனா்.
மதுரையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தினத்தையொட்டி கடந்த ஜன. 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், தேனி மாவட்ட அரசு விளையாட்டு விடுதி அணியினா் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றனா்.
திருநெல்வேலியில் கடந்த ஜன. 22-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற நீச்சல் போட்டியில் 200 மீட்டா் பிரிவில் தேனியைச் சோ்ந்த மாணவி ஜெமீனா வெண்கலப் பதக்கம் வென்றாா். திருச்சியில் கடந்த 2024, டிச. 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற பாரதியாா் விளையாட்டுப் போட்டியில், 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கபடிப் போட்டியில் தேனி மாவட்ட அரசு விளையாட்டு விடுதி அணியினா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
இவா்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.