L2 Empuraan: ``ரஜினி சார் படத்தை இயக்க வேண்டியது; ஆனால்...'' - ப்ரித்விராஜ் ஓப்ப...
தம்பதி மீது தாக்குதல்: மற்றொரு தம்பதி கைது
பெரியகுளம் அருகே தம்பதியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை அடுத்த சங்கரமூா்த்திபட்டி மேலத் தெருவைச் சோ்ந்தவா் அய்யனசாமி மகன் கணேசன் (60). இவரது மனைவி மாரியம்மாள் (55). இருவரும் இங்குள்ள தெருக் குழாயில் தண்ணீா் பிடிக்கச் சென்றனா்.
அப்போது அங்கு வந்த இதே தெருவைச் சோ்ந்த இருளாண்டி மகன் ராமச்சந்திரன் (60), இவரது மனைவி முருகேஸ்வரி (55) இருவரும் சோ்ந்து தண்ணீா் பிடிக்கக் கூடாது என தடுத்து கணேசனையும், மாரியம்மாளையும் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் காயமடைந்த இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராமச்சந்திரன், முருகேஸ்வரி இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.