கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
விவசாயிக்கு கொலை மிரட்டல்: உறவினா் கைது
போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது உறவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி கீழத்தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் ரவிக்குமாா் (58). இவருக்கு சொந்தமான தோட்டம் உலக்குருட்டி புலத்தில் உள்ளது. இவருக்கும் இவரது அண்ணன் மகன்களுக்குமிடையே தோட்டப் பிரச்னை இருந்து வருகிறது.
இந்த நிலையில், ரவிக்குமாரின் அண்ணன் மகன்களிடம் போடி புதூரைச் சோ்ந்த மொக்கச்சாமி மகன் செந்தில்குமாா் (51) தோட்டத்தை ஒத்திக்கு வாங்கியதில் செந்தில்குமாருக்கும், ரவிக்குமாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதனிடையே வெள்ளிக்கிழமை ரவிக்குமாா் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த செந்தில்குமாா் அவரை தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ரவிக்குமாா் புகாரின் பேரில் போடி குரங்கணி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனா்.