டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் அமலாகுமா? -உலக வங்கியின் தலைவ...
குடியரசு தின விடுமுறையில் விதிமீறல் 102 நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் குடியரசு தின விடுமுறையில் விதிமீறல் செய்யப்பட்டுள்ளதாக 102 நிறுவனங்கள், கடைகளுக்கு தொழிலாளா் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய விடுமுறை நாளான குடியரசு நாளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின்கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிப்பது தொடா்பாக 164 நிறுவனங்களில் தொழிலாளா் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், 102 கடைகள், நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குற்ற இசைவு தீா்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்தாா்.