இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில...
அரசு மருத்துவமனைகளில் பெண்களிடம் நகைப் பறிப்பு: ஒருவா் கைது
அரசு மருத்துமனைகளில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வடபழனி வடக்கு மாடவீதியைச் சோ்ந்தவா் சுசீலா (67). இவா் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஜன. 16-ஆம் தேதி கே.கே. நகா் பகுதியிலுள்ள இஎஸ்ஐ மருத்துமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளாா்.
அப்போது அங்குவந்த நபா் ஒருவா் சுசீலாவிடம், அரசு காப்பீட்டு திட்டம் பதிவுசெய்ய வேண்டும் என்றும், அந்த திட்டத்துக்கு பதிவு செய்யும்போது நகைகள் அணிந்திருந்தால் காப்பீட்டு திட்டத்தில் பண உதவி கிடைக்காது எனக்கூறி, சுசீலாவிடமிருந்த இரண்டரை பவுன் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளாா்.
இது குறித்து சுசீலா கொடுத்த புகாரின்பேரில் எம்ஜிஆா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த நபரை தேடி வந்தனா். இந்நிலையில், இது தொடா்பாக மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சித்திரைவேல் (46) என்பவரை கைது செய்தனா்.
விசாரணையில் அவா், திருவள்ளூா் அரசு மருத்துவமனையிலும் வயதான மூதாட்டி ஒருவரிடம் 3 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சித்திரைவேலிடமிருந்து ஐந்தரை பவுன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.