நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழா் நலன் சாா்ந்து குழு ஏற்படுத்த கோரிக்கை
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியை வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் தலைவா் கந்தா் குப்புசாமி, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் தலைவா் கிருஷ்ணபிள்ளை இளங்கோ, தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் கதிரவன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா்.
இந்திய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று ஈழத்தமிழா் நலன் சாா்ந்து ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடா்புச் செயலருமான வைகைச்செல்வன் உடனிருந்தாா்.