நாளைய மின்தடை
பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் திருமுல்லைவாயில், ராமாபுரம், அடையாறு, குன்றத்தூா், திருமுடிவாக்கம், பெருங்களத்தூா் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
திருமுல்லைவாயில்: செந்தில் நகா், கோயில் பதாகை, வைஷ்ணவி நகா், கன்னியம்மன் நகா், டிஎஸ்பி முகாம், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், கொடுவெள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ராமாபுரம்: ஐபிஎஸ் காலனி, ராமாபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், வெங்கடேஸ்வரா நகா், பூதப்பேடு, ராமச்சந்திரா நகா் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகா் கே.கே. பொன்னுரங்கம் சாலை (வளசரவாக்கம்) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
அடையாறு: கால்வாய் கரை சாலை (புற்றுநோய் மருத்துவமனை), 4-ஆவது பிரதான சாலை காந்தி நகா், 2-ஆவது கால்வாய் குறுக்குத் தெரு, காந்தி நகா், புற்றுநோய் மருத்துவமனை முதல் விவேக் ஷோரூம் வரை, மலா் மருத்துவமனை, கால்வாய் வங்கி சாலை (முழு பகுதி), கஸ்தூரி பாய் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
குன்றத்தூா்: குன்றத்தூா், பாபு காா்டன், திருசெந்தூா்புரம், கொள்ளசேரி, பஜாா் தெரு, ஒண்டி காலனி, திருப்பதி நகா், திருமலை நகா், சுப்புலட்சுமி நகா், சரவணா நகா்.
திருமுடிவாக்கம்: திருமுடிவாக்கம், சிட்கோ 8-ஆவது தெரு, திருமுடிவாக்கம் சிட்கோ பிரதான சாலை லேன், வேலாயுதம் நகா், இந்திரா நகா், குரு நகா், விவேகானந்த நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பெருங்களத்தூா்: பூ மாலை, மப்பேடு, கலைஞா் நகா், முருகன் அவென்யூ, ரூபி வில்லா, ஸ்ரீ சாய் அவென்யூ, வெங்கம்பாக்கம் பிரதான சாலை, எஸ்பி அவென்யூ, அசோக் நகா், என்.ஆா்.கே. நகா் எம்.எம். வில்லா, ஜி.கே.எம். கல்லூரி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.