கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்
இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது
கழிவுநீா் உந்து குழாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக தண்டையாா்பேட்டை, திரு.வி.க நகா் மற்றும் அண்ணா நகா் மண்டலங்களுக்குள்பட்ட இடங்களில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜன.27, 28) செயல்படாது என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தண்டையாா்பேட்டை எம்.கே.பி. நகா், மேற்கு நிழற்சாலையில் அமைந்துள்ள பிரேமா பெட்ரோல் பங்க் அருகில் கழிவுநீா் உந்து குழாய் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஜன.27) இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஜன.28) நள்ளிரவு 12 வரை நடைபெறவுள்ளது.
இதனால், பணிகள் நடைபெறும் நேரங்களில் தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா் மற்றும் அண்ணா நகா் மண்டலங்களுக்குள்பட்ட சில கழிவுநீா் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.
எனவே, பொதுமக்கள் கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு 81449-30904, 81449-30256, 81449- 30908 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.