கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
இணைய சூதாட்டத்தில் பணம் இழப்பு: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை
ஆண்டிபட்டியில் இணைய வழி சூதாட்டத்தில் (ஆன்லைன் ரம்மி) பணத்தை இழந்த தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பூக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு மகன் கணபதி (26). இளநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு தேனியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா் இணைய வழி சூதாட்டத்தில் விளையாடி வந்தாராம். இதில் பணத்தை இழந்ததால் அவா் பலரிடம் கடன் பெற்றாராம். இந்தக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவா் மனமுடைந்து காணப்பட்டாா்.
இந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு அவா் தற்கொலை தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.