செய்திகள் :

நடிகர் ஜெயசீலன் காலமானார்!

post image

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ஜெயசீலன் சென்னையில் காலமானார்.

புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெயசீலம்(40). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானார்.

விடாமுயற்சி தலைப்புக்கென ஒரு சக்தி இருக்கிறது: அஜித் குமார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஜெயசீலனின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயசீலன் திருமணமே செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே ஜெயசீலனின் மறைவு ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வேங்கைவயல் விவகாரம்- சிபிஐ விசாரணை வேண்டும்: டி.ஜெயக்குமார்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம... மேலும் பார்க்க

டி 20 கிரிக்கெட் - மின்சார ரயில்களில் இலவச பயணம்

டி20 கிரிக்கெட் போட்டிக்கு செல்வோர் நாளை மின்சார ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்... மேலும் பார்க்க

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: இபிஎஸ்

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி?

சிவகங்கையில் பள்ளி சென்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் க... மேலும் பார்க்க

கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி

கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். யாரும் அச்சம் ... மேலும் பார்க்க

பேருந்து கட்டணம் - 4 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவு

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த உத்தரவிடக்கோரி தனியார் பேருந்து ... மேலும் பார்க்க