செய்திகள் :

34 ஆண்டுகளுக்கு முன் தப்பிய குற்றவாளி! இறுதிக்காலத்தை சிறையில் கழிக்க விருப்பம்!

post image

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி 34 ஆண்டுகள் கழித்து தனது இறுதிக் காலத்தை சிறையில் கழிக்க விரும்பி சரணடைந்துள்ளார்.

கேரளத்தின் நேமோம் பகுதியில் கடந்த 1991 ஆம் ஆண்டு தன்னோடு வாழ்ந்து வந்த பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக பாஸ்கரன் என்பவர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரத்தின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அதே ஆண்டில் பாஸ்கரன் அந்த சிறையில் இருந்து தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது திருவனந்தபுர மத்திய சிறைச்சாலைக்கு 64 வயது முதியவர் ஒருவர் வந்து சரணடைந்துள்ளார். அவரது ஆதார் அட்டையில் ராமதாஸ் என்று பெயர் குறிப்பிட்டுள்ள நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு பெண்ணின் கொலை வழக்கில் கைதாகி அந்த சிறையில் இருந்து தப்பியது அவர் தான் என்று கூறியுள்ளார்.

ஆனால், இதை உறுதி செய்ய பாஸ்கரனின் புகைப்படம் கூட அதிகாரிகளிம் இல்லாததினால், அம்மாவட்டத்தின் காவல் நிலையங்களில் இதுகுறித்த ஆவணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்று கேட்டு சிறைக்காவல் துறையினர் கடிதம் அனுப்பினர்.

இதையும் படிக்க: சைஃப் அலிகான் வழக்கு! கைதானவருக்கு போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு

இதனைத் தொடர்ந்து, மஞ்சேஸ்வர் காவல் நிலையம் சரணடைந்துள்ள ராம்தாஸ்தான் தப்பிச் சென்ற குற்றவாளி பாஸ்கரன் என்று உறுதி செய்தனர்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறையில் இருந்து தப்பிய பாஸ்கரன், தனது பெயரை ராம்தாஸ் என்று மாற்றிக்கொண்டு காசர்கோடு மாவட்டத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், சில ஆண்டுகள் முன்னர் அவரது மனைவி இறந்துவிட்டதாகவும் அவரது பிள்ளைகள் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும், தனது இறுதிக்காலத்தை சிறையில் கழிக்க விரும்பி சரணடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவனந்தபுரம் மத்திய சிறை அதிகாரிகள் கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் மிகவும் விசித்திரமானது என்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர் தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இளம் தம்பதி சுட்டுக்கொலை! கொலையாளி தப்பியோட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் கணவன் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார்.ஜெய்பூரின் சங்கனெர் சதார் பகுதியிலுள்ள சாந்தி விகார் காலனியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 26), இவர் தனது மனைவி ... மேலும் பார்க்க

உரிமையாளர் மர்ம மரணம்! உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்!

ருமேனியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளன.ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா நியாகோ (வயது 34) என்ற பெண் தனது வீட்டில் இரண்டு பக் வகை நாய்... மேலும் பார்க்க

வளர்ப்புப் பூனையால் வேலையை இழந்த பெண்!

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் வளர்ப்புப் பூனையின் செயலினால் பெண் ஒருவர் தனது வேலையை இழந்துள்ளார்.சீனாவின் சோங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் இந்த மாதம் துவக்கத்தில் அவர் பணிப்புரியும் நி... மேலும் பார்க்க

7 ஆம் வகுப்பு மாணவன் பலி!ஆசிரியர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆசிரியர் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளான்.சோனிட்பூர் மாவட்டத்தின் சிராஜுலி பகுதிலுள்ள தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் கடந்த ஜன.22 அன்று அமன் குமார் என்ற ... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் க... மேலும் பார்க்க

புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி!

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் அங்கு பணிப்புரியும் ராதா (வயது 45) என்ற... மேலும் பார்க்க