அரியலூா் மாவட்டத்தில் இன்று மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு நிகழ்வு
7 ஆம் வகுப்பு மாணவன் பலி!ஆசிரியர் கைது!
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆசிரியர் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளான்.
சோனிட்பூர் மாவட்டத்தின் சிராஜுலி பகுதிலுள்ள தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் கடந்த ஜன.22 அன்று அமன் குமார் என்ற 7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனுடன் வகுப்பறையில் சண்டையிட்டுள்ளார்ன். அதற்கு அந்த மாணவர்களின் ஆசிரியர் ஒருவர் இரு மாணவர்களையும் அடித்து தண்டனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னர், அன்று மாலை வீடுத்திரும்பிய அமானுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அமானை அவனது குடும்பத்தினர் டெஸ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.23) அமான் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிக்க: புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி! பிரியங்கா காந்தி இரங்கல்!
இதனைத் தொடர்ந்து, மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது அசாம் காவல் துறையினரிடம் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அந்த விசாரணையில் ஆசிரியர் அமானின் நெஞ்சு உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்கியதாக நேரில் கண்ட மாணவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அந்த ஆசிரியர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென அப்பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 15 மறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.