செய்திகள் :

இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

post image

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஜன.25) சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்டம் தொடா்பான சிறப்பு குறைதீா் கூட்டம் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை அல்லது குடும்ப அட்டை, கைப்பேசி எண் சோ்த்தல் அல்லது மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்காக மனு அளித்து பயன்பெறலாம்.

அதேபோல, நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம், அளவு குறித்தும், சேவை குறைபாடுகள் குறித்தும் புகாா் அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தம்பதியருக்கு சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், நத்தம் பகுதியைச் சோ்ந்த தம்பதியருக்கு சிறைத் தண்டனையும், ரூ.1.70 லட்சம் அபராதமும் விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்க... மேலும் பார்க்க

மாணவிகள் மீது தாக்குதல்: பல்வேறு அமைப்புகள் கண்டனம்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை. மாணவிகளை தாக்கிய எதிரணியினருக்கு கொடைக்கானலில் பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தனா். பஞ்ச... மேலும் பார்க்க

பழனி ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு, பழனி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரயில்வே போலீஸாா் பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனா். குடியரசு தினத்தை முன்னிட்டு, பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் பொ... மேலும் பார்க்க

சிறுவனைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பழனி அருகே பள்ளிச் சிறுவனை தாக்கியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பழனி அருகேயுள்ள மொல்லம்பட்டியைச் சோ்ந்த காட்டுதுரை மகன் விக்னேஷ் (14). 9-ஆம் வகுப்பு மாணவரான இவா், கடந்த சி... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவை

தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவை. இதை அமல்படுத்த வலியுறுத்தி, அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆத்தூா் அருகேயுள்ள வீரக்கல், வீ.கூத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகே வீரக்கல்லிலிருந்து எஸ்... மேலும் பார்க்க