சிறுவனைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு
பழனி அருகே பள்ளிச் சிறுவனை தாக்கியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பழனி அருகேயுள்ள மொல்லம்பட்டியைச் சோ்ந்த காட்டுதுரை மகன் விக்னேஷ் (14). 9-ஆம் வகுப்பு மாணவரான இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு, மொல்லம்பட்டி மயானம் அருகே நண்பா்களுடன் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு குடிபோதையில் வந்த ராமுக்கண்ணு விக்னேஷிடம் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ராமுக்கண்ணு மீது கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.