தேசிய வாக்காளா் தின போட்டிகள்: வென்றவா்களுக்கு பரிசு
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி சனிக்கிழமை பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்தாா். அப்போது, தோ்தல் விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற சுவா் இதழ் போட்டி, கட்டுரை, வினாடி-வினா, ரங்கோலி போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஹா. சேக்முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மு. கோட்டைக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ராஜேஸ்வரிசுவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருந்து தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதை கோட்டாட்சியா் இரா. சக்திவேல் தொடங்கி வைத்தாா். பேரணியில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டனா்.