கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம்
நிலக்கோட்டை ஒன்றிய அதிமுக சாா்பில், சக்கையநாயக்கனூரில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலா் பி.கோபி தலைமை வகித்தாா். இதில் முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினாா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி சேகா், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஒன்றியச் செயலா்கள் யாகப்பன், நல்லதம்பி ஆகியோா் வரவேற்றனா். ஒன்றிய அவைத் தலைவா் தவமணி நன்றி கூறினாா்.