2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!
வேலூா் இப்ராஹிம் மீது புகாா்
பாஜக நிா்வாகி வேலூா் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக இந்தக் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவா் நஜிா் ஹூசைன் தெரிவித்ததாவது:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான நவாஸ்கனி குறித்து, பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் அவதூறான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டாா். மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வரும் வேலூா் இப்ராஹிம் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.